×

ஜவ்வரிசி வடாம்

தேவையானவை

ஜவ்வரிசி – 3 கப்,
புளித்த மோர் – ஒன்றரை கப்,
காய்ந்த மிளகாய் – 15 (விழுதாக அரைத்துக்கொள்ளவும்),
இஞ்சிச் சாறு – கால் கப்,
நெய் – 2 தேக் கரண்டி,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

ஜவ்வரிசியை நன்கு அலசி, 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊற வைத்த பிறகு, நீரை வடித்து மிளகாய் விழுது, உப்பு, இஞ்சிச்சாற்றை ஊறிய ஜவ்வரிசியுடன் சேர்த்து நன்கு கிளறவும். பெரிய அடிகனமான பாத்திரத்தில் 4 – 5 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் ஜவ்வரிசிக் கலவையைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும். ஜவ்வரிசி நன்கு வெந்த பதம் வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, புளித்த மோர், நெய் சேர்த்துக் கிளறிவிடவும்.மாவு ஆறியதும், வெயிலில் சுத்தமான துணி அல்லது பெரிய பாலித்தீன்கவரைப் பரப்பி, சிறு கரண்டியால் மாவினை எடுத்து சின்ன சின்ன வட்டங்களாக ஊற்றி வைக்கவும். பின்னர் அவற்றை 3-4 நாட்கள் காயவைத்து எடுத்து, ஈரம் இல்லாத டப்பாவில் போட்டு வைத்து, தேவைப்படும்போது பொரித்து சாப்பிடலாம்.

The post ஜவ்வரிசி வடாம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாழைப்பழம் ஓட்ஸ் குக்கீஸ்