×

கூட்டணி கட்சிகளின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அதிர்ச்சி

டெல்லி: டெல்லியில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. கூட்டணி கட்சிகளின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அதிர்ச்சி. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும்; தங்கள் ஆதரவின்றி பாஜக ஆட்சியமைக்க முடியாது என்பதால் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள், சபாநாயகர் பதவிகளை இருவரும் கேட்கின்றனர்

நடந்து முடிந்த மக்களவைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி பாஜக கூட்டணி 290 தொகுதிகளிலும்,இந்திய கூட்டணி 235 தொகுதிகளிலும், மற்றவை 18 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இதில் பாஜக 239 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டத்தில் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு, மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். தங்கள் ஆதரவின்றி பாஜக ஆட்சியமைக்க முடியாது என்பதால் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள், சபாநாயகர் பதவிகளை இருவரும் கேட்கின்றனர். இந்தியா கூட்டணி தரப்பில் இருந்தும் அழப்பு விடுக்கப்படுவதால் முக்கிய இலாகாக்கள் வேண்டும் என சந்திரபாபு, நிதிஷ் குமார் பிடிவாதமாக உள்ளனர். ஒன்றிய அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை 2 கட்சிகளும் கேட்பதால் யாருக்கு ஒதுக்குவது என்பதில் பாஜக குழப்பம் அடைந்துள்ளது.

தொடர்ந்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, போலாவரம் நீர்பாசன திட்டத்துக்கு நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை சந்திரபாபு முன்வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்றும் ஐக்கிய ஜனதாதளம் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. 16 எம்பிக்களை வைத்துள்ள சந்திரபாபு நாயுடு, 11 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவியை கேட்டுள்ளார். 7எம்பிக்களை வைத்துள்ள மாராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, 3 ஒன்றிய அமைச்சர் பதவிகளை கேட்டுள்ளார்.

கூட்டணி கட்சிகளின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

The post கூட்டணி கட்சிகளின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : BJP ,Modi ,Delhi ,Nitish ,Chandrababu Naidu ,
× RELATED பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லை; மோடி...