×

சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக விமான சேவைகள் 2வது நாளாக பாதிப்பு..!!

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக விமான சேவைகள் 2-வது நாளாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்து வரும் மழையால் மோசமான வானிலை நிலவி வருகிறது. அபுதாபி, திருச்சி, டெல்லி, திருவனந்தபுரம், அந்தமானில் இருந்து வந்த 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. 4 விமானங்கள் வானில் ஒரு மணி நேரமாக வட்டமடித்த நிலையில், மழை ஓய்ந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின.

 

The post சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக விமான சேவைகள் 2வது நாளாக பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Abu Dhabi ,
× RELATED கோவையிலிருந்து அபுதாபிக்கு சர்வதேச விமான சேவை தொடங்கப்படவுள்ளது