×

அதிமுக படுதோல்வி எதிரொலி: எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கண்கலங்கிய முக்கிய நிர்வாகிகள்

சேலம்: தமிழகம், புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்கி உள்ளார். இந்த நிலையில், ஈரோட்டை சேர்ந்த மாஜி அமைச்சர் கருப்பண்ணன், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதன்பிறகு சேலம் தொகுதி வேட்பாளர் விக்னேஷ், ஓமலூர் எம்எல்ஏ மணி, மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

அப்போது விக்னேஷ் கண் கலங்கியதாக தெரிகிறது. அவருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி தைரியம் கொடுத்துள்ளார். இதுபோல் தோல்வியடைந்த வேட்பாளர்களுடன் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் சேலம் வந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தோல்விக்கான காரணம் குறித்து தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

The post அதிமுக படுதோல்வி எதிரொலி: எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கண்கலங்கிய முக்கிய நிர்வாகிகள் appeared first on Dinakaran.

Tags : Adimuka Baddolvi ,Eadapadi Palanisami ,Salem ,Tamil Nadu ,Puducherry ,EDAPPADI PALANISAMI ,Maji Minister ,Karupananan ,Erota ,Edappadi ,Adimuka Baddolvi Etoroli ,Edapadi Palanisami ,
× RELATED டெபாசிட் இழந்த வேட்பாளர்கள்...