×

கணவர் இறந்த சோகத்தில் மனைவி மயங்கி விழுந்து சாவு; இறப்பிலும் இணை பிரியா தம்பதி

தஞ்சை: தஞ்சை வடக்குவாசல் சுண்ணாம்புக்காளவாய் சாலையை சேர்ந்தவர் மெய்யழகன் (43). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (36). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மல்லிகா, தனது குழந்தைகளுடன் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். மெய்யழகன் மட்டும் கடந்த சில நாட்களாக வீட்டில் தனியாக இருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் வேலை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தூங்கிய மெய்யழகன் காலையில் வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மெய்யழகன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து குழந்தைகளுடன் சிவகங்கை சென்ற அவரது மனைவி மல்லிகாவுக்கு தகவல் கொடுத்தனர். பதறியடித்து வந்த மல்லிகா, கணவரின் சடலத்தை பார்த்து கதறி அழுதார். இறுதி சடங்கு முடிந்து மெய்யழகன் உடல் இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. கணவரை தூக்கி செல்வதை கண்டு மயங்கி விழுந்த மல்லிகாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினர். கணவர் இறந்த துக்கத்தில் மனைவி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post கணவர் இறந்த சோகத்தில் மனைவி மயங்கி விழுந்து சாவு; இறப்பிலும் இணை பிரியா தம்பதி appeared first on Dinakaran.

Tags : Thanjay ,Meiyazhagan ,Thanjay North Gate Chalk Road ,Mallika ,Sivaganga ,
× RELATED அதிமுகவுடன் அமமுகவை இணைக்கும் எண்ணம் இல்லை: டிடிவி தினகரன் பேட்டி