×

இந்தியா கூட்டணி நாட்டை வழிநடத்தும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்

சென்னை: நாட்டை வழிநடத்தும் பணியை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் அனுப்பியுள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியினருடன் பங்களிப்புடன் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். திமுக கூட்டணியின் மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது. கொள்கை உறுதி, இலட்சியப் பார்வை, திட்டமிட்ட உழைப்பு, தெளிவான வியூகம் இருந்தால் 40-க்கு 40 தொகுதிகளையும் வெல்ல முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post இந்தியா கூட்டணி நாட்டை வழிநடத்தும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் appeared first on Dinakaran.

Tags : India ,Madal ,CM ,Stalin ,CHENNAI ,Chief Minister ,M.K.Stalin ,India alliance ,Tamil Nadu ,Puducherry ,DMK ,All India Alliance ,DMK alliance ,M.K.Stal ,
× RELATED 2026 தேர்தலில் வென்று பாமக...