×

தறிகெட்டு ஓடிய லாரி மோதி இன்ஜினியர் பரிதாப பலி

வேளச்சேரி: விழுப்புரம் மாவட்டம் வளத்தி கிராமத்தை சேர்ந்த கோபால் (33), மேடவாக்கத்தில் தங்கி, சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று பள்ளிக்கரணை மேம்பாலம் அருகே பைக்கில் சென்றபோது, அவ்வழியாக வந்த தண்ணீர்  லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடி கோபாலின் பைக் உள்பட அவ்வழியாக சென்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில், கோபால் சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிக்கரணையை சேர்ந்த கணேசன் (34) படுகாயமடைந்தார். பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. கணேசன்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, திருவாரூர் மாவட்டம், வடபாதி மங்களம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் பூவரசனை (25) கைது செய்து விசாரிக்கின்றனர்….

The post தறிகெட்டு ஓடிய லாரி மோதி இன்ஜினியர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Gopal ,Valathi ,Villupuram district ,Medavakkam ,
× RELATED காரைக்குடி மற்றும் சுற்று வட்டார இடங்களில் மழை!