×

இந்தியா கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியுமா?.. வாய்ப்புகள் என்ன?.. பரபரப்பு தகவல்கள்

டெல்லி: மத்தியில் பாஜக தலைமையில் அமையவுள்ள புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாக அமையவுள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளில் எந்தக் கட்சியும் வெற்றி பெறாததால் கூட்டணி ஆட்சி அமைகிறது. தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி துணையுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. 2014, 2019ம் ஆண்டை தொடர்ந்து 2024லும் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது.

எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 இடங்களிலும் சமாஜ்வாதி 39 இடங்களிலும் திரிணமூல் 29, திமுக 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 239 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 52 தொகுதிகளில் வென்ற நிலையில் தற்போது காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இந்தியா கூட்டணி முன் இருக்கும் சில வாய்ப்புகள்.

ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவைப்படும் நிலையில் NDA கூட்டிணியை இந்தியா கூட்டணி உடைத்தாக வேண்டும். தெலுங்குதேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஓய்எஸ்ஆர் காங். சேர்த்து மொத்தம் 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 32 இடங்களை வைத்துள்ள 3 கட்சிகளையும் இந்தியா கூட்டணியில் இணைக்க காங்கிரஸ் முயற்சிக்கலாம். NDA கூட்டணியில் உள்ள மேலும் பல கட்சிகளையும் இணைத்தால் மட்டுமே இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பு கிடைக்கும். கூட்டணிக் கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டால் மோடி மீண்டும் பிரதமராவதை தடுக்க முடியாது. நவீன் பட்நாயக், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆகிய கட்சிகளை இந்தியா கூட்டணி இழுக்க முயற்சி செய்து வருகிறது.

The post இந்தியா கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியுமா?.. வாய்ப்புகள் என்ன?.. பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,BJP ,National Democratic Alliance ,Lok Sabha elections ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி...