- மூணாறு
- டீன் குரியாகோஸ்
- காங்கிரஸ்
- கேரள மாநிலம்
- ஜாய்ஸ் ஜார்ஜ்
- இடதுசாரி கூட்டணி
- பாரத் தர்ம ஜன சேனா
- பி.ஏ.
- பாஜா நாடாளுமன்ற தொகு
- ஈ. ஜே. எஸ்
- சங்கீதா விஸ்வநாதன்
- தின மலர்
மூணாறு: கேரள மாநிலம், இடுக்கி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் டீன் குரியாகோஸ், இடது சாரி கூட்டணி சார்பில் ஜோய்ஸ் ஜார்ஜ், பாஜ சார்பில் பாரத் தர்ம ஜன சேனா (பி.டி.ஜே.எஸ்) வேட்பாளர் சங்கீதா விஸ்வநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். கேரளாவை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி செய்யும் இடது சாரி கூட்டணி அரசுக்கு இந்தத் தேர்தல் முக்கியத்துவமாக கருதப்பட்டது.
அதேபோல் மாவட்டத்தில் நிலவிய பூமி, பட்டா மற்றும் வனவிலங்கு பிரச்சனை போன்றவை மூன்று முன்னணிகளுக்கும் நெருக்கடியை தந்தன.இந்நிலையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இடுக்கி மாவட்டத்தில் டீன்குரியாகோஸ் 1,31,154 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டாவது முறையாக இடுக்கி பாராளுமன்ற தொகுதியில் டீன் குரியாகோஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மூணாறு உட்பட மாவட்டத்திலுள்ள பல பகுதிகளிலும் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர்.
The post இடுக்கியில் காங்கிரஸ் வெற்றி appeared first on Dinakaran.