×

மின்சாரம் தாக்கி பெயின்டர் படுகாயம்

 

போடி, ஜூன் 5: தேனி மாவட்டம், போடி வஞ்சி ஓடை தெருவை சேர்ந்தவர் கதிரேசன் மகன் அஜித்குமார் (24). பெயின்டர். கடந்த மே 11ம் தேதி போடி வ.உ.சி. நகரில் தினேஷ்குமார் என்பவரது வீட்டில் பெயின்ட் அடிப்பதற்காக அஜித்குமார், அவரது நண்பர் பவித்ரன் ஆகியோர் சென்றனர். வீட்டின் இரண்டாவது மாடியில் பெயின்ட் அடித்து கொண்டிருந்தபோது, அருகில் செல்லும் உயரழுத்த மின்கம்பியில் அஜித்குமாரின் உடல் உரசியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த தீக்காயமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இது தொடர்பாக  தினேஷ்குமார் மீது போடி தாலுகா காவல்நிலையத்தில் கதிரேசன் புகார் அளித்தார். இதன்பேரில் எஸ்ஐ இளங்கோவன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post மின்சாரம் தாக்கி பெயின்டர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Ajith Kumar ,Vanchi Odai Street, Theni district ,Bodi ,Dinesh Kumar ,Dinakaran ,
× RELATED பைக் மீது கார் மோதி 2 பேர் படுகாயம்