×

கோவைக்கு தேவையான திட்டத்தை பெற்று தருவேன்

 

கோவை, ஜூன் 5: கோவை வாக்கு எண்ணும் மையத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த திமுக தலைவருக்கு நான் முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை நாங்கள் கண்டுகொள்ளவில்லை. அதற்கு நேர் மாறாக தேர்தல் முடிவு வந்துள்ளது. அது 2நாள் நடத்தப்பட்ட ஒரு டிராமா. சஸ்பென்ஸ் கொடுத்தார்கள். அது தவிர வேறொன்றுமில்லை. இந்தியா முழுக்க இதுதான் நிலைமை.  கோவையில் அத்தியாவசிய பணிகளை செய்ய வேண்டி உள்ளது.

விமான நிலைய விரிவாக்கம், கோவை ரயில் நிலைய மேம்பாடு, மெட்ரோ திட்டம் போன்றவற்றை செயல்படுத்த வேண்டி உள்ளது 15, 20 ஆண்டுகளுக்கு மேலாக கோவை ரயில் நிலையம் அப்படியே உள்ளது. எந்த மேம்பாட்டு பணியும் நடைபெறவில்லை. இதை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி கோவைக்கு தேவையான திட்டங்களை பெற்று தருவேன். கோவையில் ஜிஎஸ்டி காரணமாக தொழில்கள் வெகுவாக நலிவடைந்துவிட்டன. பாஜ ஆட்சியில் கோவைக்கு எந்த திட்டத்தையும் செய்யவில்லை. அதிமுக மூன்றாவது இடம் பெற்றதற்கு கட்சியின் செயல்பாடுதான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

The post கோவைக்கு தேவையான திட்டத்தை பெற்று தருவேன் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,DMK ,Ganapathi Rajkumar ,Dinakaran ,
× RELATED மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில பெண் மீட்பு