×

காற்றுடன் மழை: மரம் சாய்ந்தது

 

ஈரோடு, ஜூன் 5: ஈரோட்டில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மரம் சாய்ந்தது. ஈரோட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் கோடை மழை பரவலாக பெய்தது. தொடர்ந்து, ஒரு வாரம் மழை பெய்யாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் திடீரென வானம் இருண்டு சுமார் 5.45 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. அப்போது பலத்த காற்றும் வீசியது.

இதில், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் சரிந்து விழுந்தன. ஈரோடு, நாடார்மேடு, லெனின் வீதியில், சாலையோரம் இருந்த மரம் வேருடன் சாய்ந்தது. அந்த மரம் சாலையின் குறுக்கே விழாமல் ரயில்வே காலனியில் உள்ள ஓடையில் விழுந்ததால் அசம்பாவிதமோ, போக்குவரத்து பாதிப்போ ஏற்படவில்லை.

தொடர்ந்து, நேற்று காலையில் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. ஆனால் பகல் 12 மணியளவில் வெயில் அதிகரிக்க தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
நம்பியூர்-48, பெருந்துறை-18, ஈரோடு-17, வறட்டுப்பள்ளம் அணை-11.4, தாளவாடி-11, எலந்தகுட்டைமேடு-10.4, பவானிசாகர் அணை-4.8, கோபிசெட்டிபாளையம்-4.2, பவானி-1.8, கொடிவேரி அணை-1.2

 

The post காற்றுடன் மழை: மரம் சாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Erode ,Dinakaran ,
× RELATED சாலையில் ஜல்லி கற்கள்: அகற்றி சீர்செய்த போலீஸ்