×

தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து

பெரும்புதூர், ஜூன் 5: பெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் சிப்காட்டில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை தொழிற்சாலை ஊழியர்கள் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, தொழிற்சாலையின் உதிரி பாகங்கள் சேமித்து வைத்திருந்த பகுதியில் திடீரென கரும்புவை வந்துள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் தொழிற்சாலையில் மளமளவென தீபற்றி எரிய தொடங்கியது. இதனைகண்ட, ஊழியர்கள் அலறியடித்துகொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து, பெரும்புதூர் காவல் நிலையத்திற்கும், பெரும்புதூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கார் உதிரி பாகங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து பெரும்புதூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Fire ,Perumbudur ,Chipgat ,Dinakaran ,
× RELATED மனைவியுடனான தகாத உறவை கண்டித்ததால்...