×

கருணாநிதி பிறந்த நாள் விழா

சேலம், ஜூன் 5: மல்லூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி அலுவலகம் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கம் தலைமையில், மல்லூர் பேரூராட்சி தலைவர் லதா, துணைத்தலைவர் அய்யனார் ஆகியோர் முன்னிலையில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், திடக்கழிவு பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேட்டி- சேலை உள்ளிட்ட நலஉதவிகள் வழங்கினர். நிகழ்ச்சியில்இ மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் உமா சங்கர், பேரூராட்சி கவுன்சிலர்கள் பெருமாள், சந்திரா, செல்வாம்பாள், மோகனப்பிரியா, கலைச்செல்வி, பழனிசாமி, மல்லூர் பேரூர் நிர்வாகிகள் கோழி கோபி, செந்தில், சீனிவாசன், சங்கர், அருளானந்தம், கண்ணன், சந்திரன், பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கருணாநிதி பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Karunanidhi ,Salem ,Chief Minister ,Mallur ,Salem East District ,DMK Secretary ,Sivalingam ,Municipality ,President ,Latha ,Vice President ,
× RELATED பேருந்து நிலையத்தில் செல்போன் திருட்டு