×

சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு: ஆந்திராவின் தலைநகராகும் அமராவதி

ஆந்திர மாநில சட்டப்பேரவையில் 2019ம் ஆண்டு தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த சந்திரபாபுவை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவையில் ஏளனமாக பேசியதோடு அவரது குடும்பத்தினர் குறித்தும் வன்மையான வார்த்தைகளால் பேசினர்.

இதனால் மனம் உடைந்த சந்திரபாபு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறுவதாக ஆவேசமாக கூறியதோடு, ‘இனி இந்த பேரவைக்குள் வருவதாக இருந்தால் முதல்வராக மட்டுமே வருவேன்’ என சபதம் எடுத்து வெளியேறினார். அந்த சபதத்தை நிறைவேற்றும் விதமாக தற்பொழுது முழு மெஜாரிட்டியுடன் தெலுங்கு தேசம் கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்று சந்திரபாபு தனது சபதத்தை நிறைவேற்றி உள்ளார். இதனால் முதல்வராக பதவியேற்று ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவைக்கு செல்ல உள்ளார்.

The post சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு: ஆந்திராவின் தலைநகராகும் அமராவதி appeared first on Dinakaran.

Tags : Chandrababu ,Amravati ,Andhra Pradesh ,YSR Congress Party ,YSR ,Telugu Desam Party ,AP State Legislature ,Chandra Bhabu ,Andhra ,
× RELATED கட்சியினருக்கு பரிசாக தந்து...