×

திமுக நேரடியாக போட்டியிட்ட 21 தொகுதிகளில் 20 தொகுதிகளில் 1 முதல் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை: திமுக நேரடியாக போட்டியிட்ட 21 தொகுதிகளில், 20 தொகுதிகளில் 1 முதல் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லி லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் என மெகா கூட்டணி அமைந்து களம் கண்டனர். மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் தொகுதி பங்கீடு மூலம் தொகுதிகள் பிரிக்கப்பட்டது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது போக 21 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிட்டனர்.

இந்த 21 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். அதாவது போட்டியிட்ட 21 தொகுதிகளில் 20 தொகுதிகளில் ஒன்று முதல் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தர்மபுரி தொகுதியில் மட்டும் திமுக வேட்பாளர் ஆ.மணிக்கும், பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த போட்டியில் திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றி பெற்றார். ஆனாலும் திமுக வேட்பாளர் 21300 வாக்குகள் மட்டுமே வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியை தவிர்த்து மற்ற திமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

The post திமுக நேரடியாக போட்டியிட்ட 21 தொகுதிகளில் 20 தொகுதிகளில் 1 முதல் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி appeared first on Dinakaran.

Tags : DMK ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும்...