×

எண்ணூர் சுடுகாட்டில் செல்போன் வெளிச்சத்தில் உடல் தகனம்

திருவொற்றியூர்: எண்ணூர் சுடுகாட்டில் விளக்கு எரியாததால் செல்போன், தீப்பந்தம் வெளிச்சத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. சென்னை எண்ணூர் தாழங்குப்பம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தர்மா (31). இவர் நேற்றுமுன்தினம் இறந்தார். இதையடுத்து அவரது சடலத்தை அடக்கம் செய்வதற்காக எண்ணூரில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சுடுகாட்டில் எரியூட்டு தளத்தை சுற்றி தெருவிளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து தீப்பந்தம், மொபைல் டார்ச் லைட் வெளிச்சத்தில் அடக்கம் செய்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

The post எண்ணூர் சுடுகாட்டில் செல்போன் வெளிச்சத்தில் உடல் தகனம் appeared first on Dinakaran.

Tags : Tūtur Shothugat ,Tulur fire ,Dharma ,Amman Temple Street, Chennai Tolur Thalangupam ,Numur Shothugat ,
× RELATED சேலத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து 2...