×

திமுக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அனைத்து தேர்தலிலும் வெற்றியை மட்டுமே களம் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அனைத்து தேர்தலிலும் வெற்றியை மட்டுமே ருசித்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கலைஞர் மறைவை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு திமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அடுத்த சில மாதங்களிலேயே 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள நேர்ந்தது.

தலைவரான பின்னர் சந்தித்த முதல் தேர்தலிலேயே தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களில் திமுக கூட்டணிக்கு அவர் வெற்றியை தேடி தந்தார். அவரின் சூறாவளி பிரசாரம் அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தது. அதன் பிறகு 21 தொகுதிகள் சட்டமன்ற இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடை தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல் வந்தது. அப்போது எதிர்க்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் திமுகவிற்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இப்பொழுது 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பிரமாண்ட வெற்றியை அவர் தேடித்தந்துள்ளார். தோல்வியே காணாத தலைவராக மு.க.ஸ்டாலின் வலம் வருகிறார். அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு தேர்தல் வரலாற்றில் தங்கள் கூட்டணிக்கு அடுத்தடுத்த ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 100 சதவீத வெற்றியை தேடித்தந்த ஒரே தலைவராக மு.க.ஸ்டாலின் விளங்கி வருகிறார்.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கலைஞர் மறைவால் உருவான அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலினால் நிரப்ப முடியுமா? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் தற்போது தமிழ்நாட்டின் நிகழ்காலமும், எதிர் காலமும் மு.க.ஸ்டாலினை வைத்து தமிழ்நாடு தன்னை நிரப்பிக்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post திமுக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அனைத்து தேர்தலிலும் வெற்றியை மட்டுமே களம் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Dimuka ,K. Stalin ,Chennai ,MLA ,Dimugham ,Prime ,Mu. K. Stalin ,Dinakaran ,
× RELATED மக்களுக்கான குரல் வலுவாக...