×

மக்களவைத் தேர்தலில் 280க்கும் மேல் முன்னிலை வகித்தாலும் 107 இடங்களில் 1000 வாக்குகள் கூட வித்தியாசம் இல்லை; விழிபிதுங்கும் பாஜக

சென்னை: நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. 543 தொகுதிகளை கொண்ட மக்களவையில் சுமார் 280 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. கூட்டணி இல்லாமல் பாஜக தனியாக 238 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 98 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இண்டியா கூட்டணி 225 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது முன்னணியிலுள்ள 280 தொகுதிகளில் சுமார் 107 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 1000 வாக்குகளுக்கும் கீழே உள்ளது.

இதில் பாஜக தனியாக 87 தொகுதிகளில் 1000க்கும் வாக்குகள் குறைவாகவே முன்னிலை பெற்றுள்ளது . இந்த இடங்களில் முடிவுகள் எப்படி வேண்டுமானால் மாறலாம். இந்த இடங்களில் தேர்தல் முடிவுகள் அடியோடு மாறும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மட்டும் 15 தொகுதிகளில் 1000க்கும் குறைவான வாக்குகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல் பீகாரில் சில இடங்களிலும் பாஜக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்காது, மாறாக கூட்டணி கட்சிகளின் உதவியுடனே பாஜக ஆட்சி அமைக்கும். ஒருவேளை தேர்தல் முடிவுகளில் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டால் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் வாய்ப்புகளும் உள்ளன.

தொங்கு நாடளுமன்றம்

543 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும். ஆளும் பாஜக, இண்டியா கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போகும் பட்சத்தில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம். அச்சமயத்தில் பாஜக, இண்டியா கூட்டணிகளில் சேராமல் இருக்கும் பாரதிய ராஷ்திரிய சமிதி, ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகியவை ஆதரவு கொடுக்கும் கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மக்களவைத் தேர்தலில் 280க்கும் மேல் முன்னிலை வகித்தாலும் 107 இடங்களில் 1000 வாக்குகள் கூட வித்தியாசம் இல்லை; விழிபிதுங்கும் பாஜக appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,BJP ,Chennai ,People's Elections ,National Democratic Coalition ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி...