×

கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கூடலூர் : கூடலூரில் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு கூடலூர் ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் செயலாளர் லியாக்கத் அலி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மேல் கூடலூர் ராமகிருஷ்ணா ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவை தலைவர் கருப்பையா, துணை செயலாளர்கள் காந்தி செல்லதுரை,வெங்கடாசலம்,மாவட்ட பிரதிநிதிகள் சிரிராஜா,பால்ராஜ்,பொறியாளர் அணி துணை துணைத் தலைவர் பிரதீஸ்,முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பாபு,கூடலூர் ஒன்றிய குழு தலைவர் கீர்த்தனா,நகர மன்ற தலைவர் பரிமளா,பேரூராட்சி மன்றத் தலைவர்கள் சித்ரா,வள்ளி,துணை தலைவர் நாகேஷ்,ஒன்றிய குழு உறுப்பினர்கள் உத்தமன்,கங்காதரன்,உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் சகுந்தவி,அபிதா, கவுசல்யா பாலகிருஷ்ணன்,சுப்ரமணி,ஜாபர்,ஒன்றிய பிரதிநிதிகள் சரவணன்,கலை,தங்கவேலு வார்டு செயலாளர்கள் சண்முகம்,பரசுராமன்,கிளை செயலாளர்கள் சதீஷ் குமார்,நாகராஜ்,அப்பாஸ்,விஷ்ணு,குரு மற்றும்முத்துசாமி, ராஜு, ராமன், ராஜேந்திரன், முருகையா, சவுந்தர், ஜோசப், சசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஓவேலி பேரூர் கழகம் சார்பில் பெரிய சூண்டி பஜாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் செல்வரத்தினம் தலைமை வகித்தார்.ஒன்றிய துணை செயலாளர் செல்லதுரை வரவேற்றார். முன்னாள் மாவட்ட பிரதி சத்தியசீலன்,பால்ராஜ்,யூசுப்,பாபு,முன்னாள் கவுன்சிலர் முருகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேரூர் பிரதிநிதிகள் கலைவாணன்,சரவணன்,கவுன்சிலர்கள் ஜாபர்,ஜிசா,சுப்பிரமணி, ஜனகனன், கானா மூர்த்திஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.வார்டு செயலாளர் சண்முகநாதன் நன்றி கூறினார்.

நடுவட்டம் பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட பிரதிநிதி குமார்தாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய துணை செயலாளர் விக்டர்பால்,கவுன்சிலர் லில்லி மேரி மற்றும் ராமநாதன், மாரிமுத்து, முனீர் உள்ளிட்ட பல்வேறு திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மசினகுடி பஜாரில் தலைவர் கலைஞர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கலைஞரின் பிறந்த நாளை கொண்டாடினார்.

காந்தி திடல்: கூடலூர் நகர திமுக சார்பில் கூடலூர் காந்தி திடலில் நகர செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் திமுகவினர் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நகரத்திற்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கப்பட்டது. மதியம் ஆஷா பவன் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் சீனி, தலைமை கழக பேச்சாளர் பாண்டியராஜ்,முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ்,நகர் மன்ற உறுப்பினர் இராஜேந்திரன்,அவைத் தலைவர் செல்வராஜ்,துணைச் செயலாளர்கள் ஜபருல்லா,ஜெயக்குமார்,நாகேஸ்வரி, மாவட்ட பிரதிநிதிகள் நெடுஞ்செழியன்,ரசாக்,நகர் மன்ற தலைவர் பரிமளா,மாவட்டத் துணை அமைப்பாளர்கள் வழக்குரைஞர் கிருஷ்ணகுமார்,மகேஷ்,வெண்ணிலா,அன்னபுவனேஸ்வரி,கிளைச் செயலாளர்கள் ராஜி,அபுதாஹிர்,குமார், மணி,சடையப்பிள்ளை, கருணாநிதி, ராஜா,ரெனால்ட்,சந்திரன்,பிரகாஷ்,கரீம்,ராஜகோபால், இளைஞர் அணியினர் விஜயகுமார், நியாஸ்,செல்லதுரை, நிதின்,கிஷோர்,சந்தோஷ், கலையரசி,பழனி சிவா,நகர் மன்ற உறுப்பினர்கள் சத்தியசீலன், மும்தாஜ், தனலட்சுமி,ஆபிதா,சகுந்தலா,கௌசல்யா,மணிவண்ணன், நாகேஸ்வரன் மற்றும் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் விழா எம்ஜிஆர் நகர் பகுதியில் கிளைச் செயலாளர் சடைய பிள்ளை தலைமையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் இராஜேந்திரன் முன்னிலையில் மாவட்ட பிரதிநிதி நெடுஞ்செழியன், கிளை கழக நிர்வாகிகள் நாகன், மலையரசன்,சின்னத்தம்பி,மதிவாணன், முத்துப்பாண்டி முஸ்தபா, ராமன் ஃபைசல், கண்ணன், நடராஜ், ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு, தொண்டர்களுக்கும்,பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினர்.

The post கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Karunanidhi ,Koodalur ,Union ,Liaqat Ali ,Koodalur Union ,Dinakaran ,
× RELATED மசினகுடி- கூடலூர் இடையே மீண்டும் வாகன போக்குவரத்து