×

மக்களவைத் தேர்தலில் மாஸ் காட்டும் திமுக.. முன்னிலை வகிக்கும் கூட்டணி வேட்பாளர்கள் : ஒரு தொகுதிகளில் கூட முந்தாத அதிமுக, பாஜக!!

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைத்து இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர். நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடத்தப்பட்டது. இத்துடன், ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும், சில மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

முன்னணி வகிக்கும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் விவரம்

வடசென்னை : கலாநிதி வீராசாமி
2 மத்திய சென்னை :தயாநிதிமாறன்
3 தென்சென்னை :தமிழச்சி தங்கப்பாண்டியன்
4 திருவள்ளூர் : சசிகாந்த் செந்தில்(காங்)
5 ஸ்ரீபெரும்புதூர் : டி.ஆர்.பாலு
6. காஞ்சிபுரம் : செல்வம்
7. ஆரணி : தரணிவேந்தன்
8 அரக்கோணம் : ஜெகத்ரட்சகன்
9 வேலூர் : கதிர் ஆனந்த்
10 தருமபுரி : மணி
11 தி.மலை: அண்ணாதுரை
12 கள்ளக்குறிச்சி :மலையரசன்
13 சேலம் : செல்வ கணபதி
14 ஈரோடு : பிரகாஷ்
15 நீலகிரி : ஆ.ராசா
16 கோவை : கணபதி ராஜ்குமார்
17 திருப்பூர் : சுப்பராயன் (சிபிஐ)
18 பொள்ளாச்சி : ஈஸ்வரசாமி
19 சிதம்பரம் : திருமாவளவன்(விசிக)
20 நாமக்கல் : மாதேஸ்வரன் (கொ.ம.தே.க)
21 கரூர் : ஜோதிமணி (காங்)
22 நாகப்பட்டினம் : செல்வராஜ் (சிபிஐ)
23 மதுரை : க.வெங்கடேசன்(சிபிஎம்)
24 விழுப்புரம் : ரவிக்குமார்(விசிக)
25 கிருஷ்ணகிரி : கோபிநாத்(காங்)
26 தேனி : தங்க தமிழ்செல்வன்
27 ராமநாதபுரம் : நவாஸ்கனி (இ.தே.மு.லீக்)
28 சிவகங்கை : கார்த்தி சிதம்பரம்(காங்)
29 பெரம்பலூர் : அருண்நேரு
30 திருச்சி : துரை வைகோ(ம.தி.மு.க)
31 மயிலாடுதுறை : வழக்கறிஞர் சுதா(காங்)
32 தஞ்சாவூர் : முரசொலி
33 விருதுநகர் : மாணிக்கம் தாகூர்(காங்)
34 திண்டுக்கல் : சச்சிதானந்தம் (சிபிஎம்)
35 கடலூர் : விஷ்ணு பிரசாத்(காங்)
36 தூத்துக்குடி : கனிமொழி
37 தென்காசி : ராணிஸ்ரீகுமார்
38 நெல்லை : ராபர்ட் புரூஸ்(காங்)
39 குமரி : விஜய் வசந்த்(காங்)
40 புதுச்சேரி : வைத்திலிங்கம்(காங் )

The post மக்களவைத் தேர்தலில் மாஸ் காட்டும் திமுக.. முன்னிலை வகிக்கும் கூட்டணி வேட்பாளர்கள் : ஒரு தொகுதிகளில் கூட முந்தாத அதிமுக, பாஜக!! appeared first on Dinakaran.

Tags : Lok ,Sabha ,BJP ,Chennai ,Dimuka Coalition ,Lok Sabha ,Tamil Nadu ,Puducherry ,18th Lok Sabha elections ,Dhimuka ,Bhajaka ,
× RELATED மக்களவையில் துணை சபாநாயகர் பதவி...