×

மக்களவை தேர்தல்: மகாராஷ்டிராவில் N.D.A – I.N.D.I.A கூட்டணி இடையே கடும் போட்டி..!!

மகாராஷ்டிரா: மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் N.D.A – I.N.D.I.A கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும். அதன்படி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 263 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் 229இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மற்ற கட்சிகள் 35 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி மராட்டியத்தில் காங்கிரஸ்-21, பாஜக-25 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. ஏக் நாத் சின் டே சிவசேனா பிரிவை விட, ஏக் நாத் சின் டே சிவசேனா பிரிவை விட, உத்தவ் தாக்கரே சிவசேனா பிரிவு அதிக இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. அதே போல அஜித் பவர் தரப்பு தேசியவாத காங்கிரசை விட, சரத் பாவாரின் தேசியவாத காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

The post மக்களவை தேர்தல்: மகாராஷ்டிராவில் N.D.A – I.N.D.I.A கூட்டணி இடையே கடும் போட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Election ,N.D.A ,I.N.D.I.A ,Maharashtra ,I.N.D.I.A alliance ,Lok Sabha ,
× RELATED தேர்தல் நடத்தைவிதிகள் ரத்து 10ம்தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்