×

ஈரோடு சட்டவிரோத மது விற்பனை; 10 பேர் கைது

 

ஈரோடு, ஜூன் 4: ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் இணைந்து நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பவானி அடுத்துள்ள ஒரிச்சேரி, திருமால்நகரை சேர்ந்த எம்ஜிஆர் என்கிற ராஜூ (45), நாகை மாவட்டம், காட்டு மண்குடி மதன்குமார் (29), மூணாம்பள்ளி சத்திவேல் (42), புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணி (34),

பெருந்துறை, விஜயமங்கலம் மோகன்ராஜ் (32), புதுக்கோட்டை மாவட்டம் ராமநாதன் (55), சென்னிமலை காந்திஜி வீதியை சேர்ந்த பூவேந்திரன் (48), பவானி, ஊராட்சிக்கோட்டை, ஜீவாநகரை சேர்ந்த சரணவன் மகன் கோகுல் (23), கவுந்தப்பாடி கதிர்வேல் (48), சத்தி செண்பகபுதூர் தங்கமணி (44) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல, ஈரோடு அக்ரஹாரம் அடுத்துள்ள பேரேஜ் பகுதியில் கள் விற்பனை செய்த வீரப்பன்சத்திரம், பாரதிநகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் அருண் (29) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

The post ஈரோடு சட்டவிரோத மது விற்பனை; 10 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Law and Order and Prohibition Enforcement Division ,Bhavani ,Dinakaran ,
× RELATED குடிநீர், மின்சாரம் கேட்டு கிராம மக்கள் மனு