×

கலைஞர் பிறந்த நாள் விழா ஆதரவற்றோருக்கு அன்னதானம்

குஜிலியம்பாறை, ஜூன் 4: குஜிலியம்பாறை வடக்கு ஒன்றிய திமுக சார்பில், மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு குஜிலியம்பாறை ஒன்றிய சேர்மன் சீனிவாசன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். குஜிலியம்பாறை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திருக்கூர்ணம், ஆர்.வெள்ளோடு, ஆலம்பாடி, கோட்டநத்தம், தோளிபட்டி, டி.கூடலூர், கருங்கல், லந்தக்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. முன்னதாக லந்தக்கோட்டை ஊராட்சியில் வடக்கு ஒன்றிய திமுக மற்றும் திமுக இளைஞரணி சார்பில், ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கருப்பசாமி, சிவபெருமாள், கிருஷ்ணசாமி, கர்ணன், கலைச்செல்வன், செந்தில், மோகன்ராஜ், கருங்கல் தோட்ட பழனிச்சாமி, முத்துச்சாமி, நடராஜன், பிரகாஷ், சங்கர்பெரியசாமி, வைரப்பெருமாள், முருகேசன், மணிகண்டன், பாலசுப்பிரமணி, சந்துரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் பிறந்த நாள் விழா ஆதரவற்றோருக்கு அன்னதானம் appeared first on Dinakaran.

Tags : Kujiliamparai ,Kujiliambara ,North Union DMK ,DMK ,Karunanidhi ,Kujiliampara ,Union Chairman ,Srinivasan ,Union ,President ,Sampath ,
× RELATED குஜிலியம்பாறை ஆர்.கொல்லபட்டியில் ரூ.1.59...