×

கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் வியாபாரம் களைகட்டியது வியாபாரிகள் மகிழ்ச்சி திருவிழா சீசன் தொடங்கியுள்ள நிலையில்

கே.வி.குப்பம், ஜூன் 4: கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் வியாபாரம் கணிசமாக உயர்ந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். கே.வி.குப்பத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலை வழக்கம்போல் சந்தை கூடியது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகள் வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டன. இதில் ஏராளமான வியாபாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு ஆடுகளை வியாபாரம் செய்தனர். ஆடுகளின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது. அதில், வெள்ளாடுகள், கிடாய்கள், நாட்டு ரக கிடாய்கள், கசையாடுகள், செம்மறி ஆடுகள் அதிகம் வரத்து இருந்தது. தலா ஒரு ஆடு ₹15 ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரையும், குட்டி ஆடுகள் ₹3500 முதல் ₹5000 வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரங்களில் நடைபெற்ற ஆட்டு சந்தைகளில் வியாபாரம் டல்லானதை தொடர்ந்து தற்போது, திருவிழா சீசன் என்பதால் ஆடுகளின் விற்பனை அதிகரித்து விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து வரும் வாரங்களில் ஆடுகள் வியாபாரம் கணிசமாக உயரும் என்றும், இதேபோன்று வருகின்ற வாரங்களில் கூடுதலாக வியாபாரம் களை கட்டும் என்று எதிர்பார்ப்பில் இருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

The post கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் வியாபாரம் களைகட்டியது வியாபாரிகள் மகிழ்ச்சி திருவிழா சீசன் தொடங்கியுள்ள நிலையில் appeared first on Dinakaran.

Tags : K. ,K. V. ,Vellore district ,Dinakaran ,
× RELATED குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 40 பேர்...