×

கிரிவல பாதையில் பைக் சாகசம் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அஜித்(20). பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பைக் மீது நின்றபடி வேகமாக ஓட்டி சாகச வீடியோ எடுத்துள்ளார். அதனை, சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். கிரிவல பாதையில் பக்தர்கள் அமைதியாக நடந்து செல்லும் சூழலில், அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டி சாகச வீடியோ எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை தாலுகா போலீசார் 279, 306, 308 ஐபிசி சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிந்து, பைக் சாகசம் செய்த வாலிபர் அஜித்தை நேற்று கைது செய்தனர்.

The post கிரிவல பாதையில் பைக் சாகசம் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kriwala ,Thiruvannamalai ,Ajith ,Mariamman Koil Street, Ayyambalayam village ,Tiruvannamalai ,Kriwalabathi ,Kriwala road ,
× RELATED தி.மலை மலையே சிவப்பெருமான் தான், மலையை...