×

வீட்டில் 70 சவரன் கொள்ளை 2 வாரமாகியும் துப்பு கிடைக்காமல் திணறும் தனிப்படை போலீசார்

புழல்:புழல் அடுத்த கதிர்வேடு, விஎம்கே நகர் 3வது தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(56). சென்னை திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது, மனைவி ஹேமாவதி(52). நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் துவக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்கு கடந்த 17ம்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றவர்கள், 20ம் தேதி மாலையில் வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீட்டின் முன்பக்கம் உள்ள கிரில் கதவு மற்றும் கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 70 சவரன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் லாக்கரில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற புழல் போலீசார், கைரேகை நிபுணர்களின் உதவியுடன் கைரேகைகளை பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்கள் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் நடந்து 2 வாரங்கள் ஆகியும், ஒரு துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

The post வீட்டில் 70 சவரன் கொள்ளை 2 வாரமாகியும் துப்பு கிடைக்காமல் திணறும் தனிப்படை போலீசார் appeared first on Dinakaran.

Tags : 70 Sawaran ,Puzhal ,Gopalakrishnan ,3rd Street, VMK Nagar ,Puzhal, Kathirvedu ,Tiruvallikeni Government Hospital ,Chennai ,Hemavati ,Nungambakkam.… ,Sawaran ,
× RELATED புழல் – தாம்பரம் பைபாஸ் சாலையில்...