×

வாக்கு எண்ணிக்கையில் அச்சமின்றி பணிபுரியுங்கள்: அரசு அதிகாரிகளுக்கு கார்கே வலியுறுத்தல்

புதுடெல்லி: நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அரசு அதிகாரிகளுக்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அதிகாரிகள் அரசியல் சாசனத்தை கடைப்பிடித்து அச்சமின்றியும் யாருக்கும் எதிராகவும் தவறான எண்ணம் எதுவும் இன்றி தேசத்திற்காக சேவை செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் சட்டத்திற்கு முரணான எந்த ஒரு தவறான செயலுக்கும் தலைவணங்காதீர்கள். யாருக்கும் பயப்படாதீர்கள். வாக்கு எண்ணும் நாளில் தகுதியின் அடிப்படையில் உங்களது கடமைகளை நிறைவேற்றுங்கள் அரசியலமைப்பில் உள்ள நமது லட்சியங்கள் கறைபடாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

The post வாக்கு எண்ணிக்கையில் அச்சமின்றி பணிபுரியுங்கள்: அரசு அதிகாரிகளுக்கு கார்கே வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Carke ,New Delhi ,Congress ,President ,Mallikarjuna Karke ,Garke ,
× RELATED நீட் தேர்வெழுதிய 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: கார்கே