×

கலைஞர் 101வது பிறந்தநாளையொட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: சுந்தர் எம்எல்ஏ அணிவித்தார்

மதுராந்தகம்: கலைஞரின் 101வது பிறந்தநாளையொட்டி, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ அணிவித்தார். மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், கலைஞர் பிறந்தநாள் விழாவையொட்டி மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றிய கழக செயலாளர் படாளம் சத்யசாய் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு நேற்று பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பரிசு பெட்டகங்கள் வழங்கினார். இதில், மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார், நகர செயலாளர் குமார், பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி தலைவர் தசரதன், ஒன்றிய நிர்வாகிகள் தனசேகரன், ஆறுமுகம், திருஞான செல்வம், சத்தியகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, மதுராந்தகம் நகர திமுக சார்பில் ஜிஎஸ்டி சாலை, செல்லியம்மன் தேரடி, ஹாஸ்பிடல் சாலை, திமுக அலுவலகம், கடப்பேரி உள்ளிட்ட இடங்களில் ஆயிரம் பேருக்கு இனிப்புடன் கூடிய அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார், நகர செயலாளர் குமார் உள்ளிட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் 101வது பிறந்தநாளையொட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: சுந்தர் எம்எல்ஏ அணிவித்தார் appeared first on Dinakaran.

Tags : Sundar MLA ,Madhurandakam ,Kanchipuram South District ,Madurandakam Government Hospital ,Madhurandagam North Union DMK ,Madurandagam Government Hospital ,Government Hospital ,Dinakaran ,
× RELATED உலக சாதனைக்காக சிலம்பம் சுற்றிய...