×

கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் பரபரப்பு பீர் பாட்டில் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் படுகாயம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் பெட்ரோல் பங்க் வாசலில் காலி பீர் பாட்டில் ஏற்றிக்கொண்டு வந்த லாரி கவிழ்ந்து விபத்துத்துக்குள்ளானது. இதில், டிரைவர் படுகாயமடைந்தார். இதனால், கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் நேற்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையை சேர்ந்தவர் பிச்சைமுத்து (49). டிரைவர். இவர் அரசு டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் சேகரிக்கப்படும் காலி பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து சென்னை – பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, நேற்று அதிகாலையில் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து பீர்பாட்டில் ஏற்றி வந்த லாரி மின் வாரியம் அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் வாசலில் தலை குப்புற கவிழ்ந்தது. அப்போது, லாரியில் இருந்த காலி பீர் பாட்டில்கள் நாளாபுறமும் சிதறி விழுந்தது. இதில், டிரைவர் பிச்சைமுத்து இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தார். இதனை கண்டதும் அப்பகுதி மக்கள் ஓடிவந்து படுகாயத்துடன் கிடந்த பிச்சைமுத்துவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விருந்து வந்து லாரியை அப்புறப்படுத்தினர். மேலும், புகாரின் அடிப்படையில், தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் நேற்று காலை போக்குவரத்து பாதிப்பும், பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.

The post கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் பரபரப்பு பீர் பாட்டில் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,GST Road Accident ,Guduvancheri ,Guduvanchery GST road ,Pichaimuthu ,Madurai ,GST ,Dinakaran ,
× RELATED கூடுவாஞ்சேரி – நெல்லிக்குப்பம்...