×

குடியாத்தம் அருகே நேற்றிரவு சூறாவளி காற்றுடன் கனமழை: 3 ஆயிரம் வாழைமரங்கள் சேதம்

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் கொளுத்தி வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி, தாட்டிமாணபல்லி, ராமாலை, கொல்லப்பள்ளி ஆகிய கிராமங்களில் நேற்றிரவு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

சூறாவளி காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சாய்ந்து சேதமானது. அதேபோல் தேக்கு, தென்னை, புளியமரங்களும் சாய்ந்தது. மின்கம்பங்கள் உடைந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள், சம்பவ இடங்களுக்கு சென்று மின்கம்பங்களை சீரமைத்து மின் இணைப்பு வழங்கினர்.சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குடியாத்தம் அருகே நேற்றிரவு சூறாவளி காற்றுடன் கனமழை: 3 ஆயிரம் வாழைமரங்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Kudiattam ,Gudiatham ,Vellore ,Kallappadi ,Thattimanapalli ,Ramalai ,Kollapally ,Kudiatham ,Dinakaran ,
× RELATED காணாமல் போன குளத்தை தேடி...