×

கடும் வெப்பம் காரணமாக டெல்லியில் ஜூன் 30 வரை அங்கன்வாடிகள் மூட உத்தரவு

டெல்லி: கடும் வெப்பம் காரணமாக டெல்லியில் அனைத்து அங்கன்வாடி மையங்களும் ஜூன் 30 வரை மூட உத்தரவு அளித்துள்ளார். அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் டெல்லி உள்பட்ட வடமாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

வெயில் காலம் தொடங்கியது முதலே நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் வெயில் வாட்டிவதைக்கிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 49 டிகிரியை தாண்டியதால் கடுமையான வெப்ப அலை நிலவியது.

கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் அதிகப்பட்ச வெப்பநிலையாக 52.3 டிகிரி செல்ஸியஸ் பதிவான நிலையில், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. டெல்லியைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நாக்பூரில் 52.9 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானதாக நாக்பூரில் இயங்கி வரும் IMD தகவல் வெளியிட்டிருந்தது. இது டெல்லி வெப்பநிலையை விட அதிகமான வெப்பநிலை என்பதால், மக்கள் அச்சத்துக்குள்ளாகினர்.

இந்நிலையில் குழந்தைகளின் உடல்நிலையை குறித்து கடும் வெப்பம் காரணமாக டெல்லியில் அனைத்து அங்கன்வாடி மையங்களும் ஜூன் 30 வரை மூட உத்தரவு அளித்துள்ளார். உத்தரவை மீறி அங்கன்வாடிகள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

The post கடும் வெப்பம் காரணமாக டெல்லியில் ஜூன் 30 வரை அங்கன்வாடிகள் மூட உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Anganwadis ,Delhi ,Anganwadi ,Agni ,Nakshatra ,
× RELATED டெல்லி விமான நிலையத்தில் மின்...