×

முலாம் பழத்தின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

முலாம்பழம் இனிப்புச் சுவையும், நறுமணமும் கொண்டது. இது உடல் உஷ்ணத்தை போக்க கூடியதும், வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச் சத்துக்கள் கொண்டது. வெயில் காலத்தில் உடல் சார்ந்த பிரச்சனைகளை தணிக்கும் தன்மை இந்த முலாம்பழத்திற்கு உள்ளது.முலாம்பழத்தினை உண்டுவர மூல நோய் குணமாகும். மலசிக்கல் நீங்கும், நீர்க்கடுப்பு நீங்கும், அஜீரணத்தை அகற்றி பசி ருசியை ஏற்படுத்தும். இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் தாதுப் பொருட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும். முலாம்பழம் பித்தத்தை அகற்றும். கல்லீரல் கோளாறுகளை போக்கும் தன்மை இதற்கு உண்டு. மேலும் சரும நோய்க்கு எளிய இயற்கை மருந்து. இப்பழத்தின் சதையுடன் தேன் கலந்து உண்டு வர, வாய்ப்புண், தொண்டைப்புண் குணமாகும்.

சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கவல்லதும், வயிற்றுப்போக்கை குணப்படுத்தக் கூடியது முலாம்பழம்.?

முலாம்பழத்தின் சதை மற்றும் விதையுடன் சிறிதளவு சீரகப்பொடி சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடிப்பதால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன் உற்சாகத்தையும் கொடுக்கிறது. சிறுநீர் பெருக்கியாக விளங்கும் இது சிறுநீர்த் தாரையில் ஏற்படும் எரிச்சலை தடுக்கிறது. கர்ப்பிணி பெண்கள் முலாம்பழத்தை எடுத்துக்கொண்டால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். இது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது.

காய்ச்சிய பாலுடன், விதை நீக்கிய முலாம்பழம், பனங்கற்கண்டு மற்றும் சிறிதளவு குங்குமப்பூ சேர்க்கவும். இந்த மில்க் ஷேக்கை காலை உணவின் போது எடுக்கலாம். குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.கனிந்த பழத்தின் சதைப்பகுதியை அப்படியே சாப்பிடலாம். இத்துடன் தேன் அல்லது சர்க்கரை கலந்தும் உண்ணலாம். ஜூஸ் ஆகவும், பாலுடன் கலந்து மில்க் சேக்காகவும் பருகி வர உடல் உஷ்ணம் குறையும். அஜீரணத்தை அகற்றி பசி ருசியை ஏற்படுத்தும்.

முலாம் பழத்தை உண்டு வர மூல நோய் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். சிறுநீர்த்தாரை எரிச்சல், நீர்க்கடுப்பு நீங்கும்.இதில் வைட்டமின்கள் ‘‘ஏ’, ‘‘பி’, ‘‘சி’ தாதுப் பொருட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும். கல்லீரல் கோளாறுகளைப் போக்கும் தன்மை இதற்கு உண்டு.பித்தத்தை மொத்தமாக அகற்றும். சருமநோய்க்கு எளிய இயற்கை மருந்து.இப்பழச் சதையுடன் தேன் கலந்து உண்டு வர, வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும் சக்தி இதற்கு உண்டு. கோடை நோய்கள் வராமல் காக்கும்.

தொகுப்பு: ரிஷி

The post முலாம் பழத்தின் நன்மைகள்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?