×

தாம்பரம் அடுத்த சேலையூரில் முட்டை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: சுமார் 2,000 முட்டைகள் உடைந்து நாசம்

சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூரில் முட்டை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்திற்க்குள்ளனதில் சுமார் 2,000 முட்டைகள் உடைந்து வீணாகின. தாம்பரம் அடுத்த சேலையூர் கேம் ரோடு பகுதியில் AKG முட்டை விற்பனை நிலையம் இயங்கிவருகிறது. இங்கிருந்து மாடம்பாக்கம், காமராஜர்புரம், உள்ளிட்ட பகுதிகளுக்கு முட்டை விநியோகம் செய்ய மூடப்பட்ட மினிவேனில் 2,000 முட்டைகள் ஏற்றப்பட்டது. இந்த வேனை ஓட்டுநர் காசி ராஜன் என்பவர் வேளச்சேரி மெயின் ரோடு வழியாக ஓட்டி சென்றபொது முன்பக்க அச்சு திடீரென முறிந்து நிலை தடுமாறி வேன் கவிந்தது.

இந்த விபத்தில் வேனில் இருந்த ஓட்டுனநர் காசிராஜன் மற்றும் அவரது உதவியாளர் சிறிய காயங்களுடன் போலீசார் மீட்டனர். சாலையில் வேன் கவிழ்ந்ததை அடுத்து அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் விபத்து ஏற்பட்ட வேனை அப்புறப்படுதினர். இந்த விபத்தில் வேனில் இருந்த 2,000 முட்டைகள் உடைந்து சாலையில் ஓடியது. இதனால் சாலை வழவழப்பானதை அடுத்து வேறு விபத்துகள் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீசார் அங்கிருந்த மண்ணை கொட்டி ஓரளவு சீர் செய்தனர். பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

The post தாம்பரம் அடுத்த சேலையூரில் முட்டை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: சுமார் 2,000 முட்டைகள் உடைந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Salaiur ,Tambaram ,Chennai ,AKG ,SALAIUR CAM ROAD ,Madambakkam ,Kamarajarpuram ,Dinakaran ,
× RELATED தாம்பரம் அருகே முடிச்சூரில் இருசக்கர...