×

தனது அறிவார்ந்த செயலுக்காக பலராலும் மதிக்கப்படுபவராக இருக்கிறார் கலைஞர் : பிரதமர் மோடி புகழாரம்!!

டெல்லி : தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் கலைஞர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, இன்று (ஜூன் 3) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதேபோல் கலைஞரின் 101வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் அவர் புகைப்படத்திற்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா.உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் பிரதமர் மோடியும் முன்னாள் முதல்வர் கலைஞருடனான நினைவுகளை
பகர்ந்து எக்ஸ் தலத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளார். அதில், “தமது நீண்ட கால பொது வாழ்வில் தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் கலைஞர். கலைஞரின் 101வது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நானும் கலைஞரும் முதல்வர்களாக இருந்தபோது அவருடன் நடத்திய உரையாடல்களை நினைவுகூர்கிறேன். தனது அறிவார்ந்த செயலுக்காக பலராலும் மதிக்கப்படுபவராக இருக்கிறார் கலைஞர்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாழ்த்துச் செய்தியுடன் கலைஞரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் மோடி பதிவிட்டுள்ளார்.

The post தனது அறிவார்ந்த செயலுக்காக பலராலும் மதிக்கப்படுபவராக இருக்கிறார் கலைஞர் : பிரதமர் மோடி புகழாரம்!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,Tamil Nadu ,Chennai Marina ,PM Modi ,
× RELATED மோடி அரசால் சீரழிக்கப்பட்ட...