×

கோடை விடுமுறையை ஒட்டி நாளை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும்: பூங்கா நிர்வாகம் தகவல்

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை (ஜூன் 04.06.2024)அன்று பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2000க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. அதில் சிறுத்தை, வெள்ளை புலிகள், மனித குரங்குகள், வங்காளப் புலிகள், நீர்நாய், சிங்கங்கள் என அனைத்து வகையான விலங்குகளும் உள்ளன.

இந்த பூங்காவில் குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகளின் இருப்பிடம், பூங்கா மீன் மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா கண்காட்சியகம் போன்றவை தனித்தனியாக அமைந்துள்ளது. மேலும் விலங்குகள் கோடைகால வெயிலை சமாளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்களின் பொழுதுபோக்கு இடமாக இந்த பூங்கா விளங்குகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்வையிட்டு செல்கின்றனர்.

வண்டலூர் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை செயல்படாமல் விடுமுறை தினமாக தான் இருக்கும். இந்நிலையில் நாளை (ஜூன் 04) பூங்கா திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு நாளை 04.06.2024 (செவ்வாய்கிழமை) அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான நேரத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கோடை விடுமுறையை ஒட்டி நாளை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும்: பூங்கா நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Vandalur Anna Zoo ,CHENNAI ,Vandalur Zoo ,Vandalur, Chennai, ,Arinagar Anna Zoo ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும்: நிர்வாகம் அறிவிப்பு