×

மோடி பிரதமராகவும், மனைவி ராதிகா வெற்றிபெறவும் வேண்டி விருதுநகர் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்த நடிகர் சரத்குமார்

விருதுநகர்: மோடி பிரதமராகவும், ராதிகா வெற்றிபெறவும் வேண்டி சரத்குமார் அங்கப்பிரதட்சணம் மேற்கொண்டார். தற்போது, நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், பாஜக சார்பில் நடிகை ராதிகா, அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

விருதுநகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில், பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி வர வேண்டும் எனவும் நாடாளுமன்ற தேர்தலில் ராதிகா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் எனவும் வேண்டி நடிகர் சரத்குமார் அங்கபிரதட்சணம் செய்துள்ளார். அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. கோயிலுக்குள் சரத்குமார், ராதிகா ஆகியோர் வேண்டுதலை நிறைவேற்றியதை காண பக்தர்கள் திரண்டனர்.

The post மோடி பிரதமராகவும், மனைவி ராதிகா வெற்றிபெறவும் வேண்டி விருதுநகர் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்த நடிகர் சரத்குமார் appeared first on Dinakaran.

Tags : Sarath Kumar ,Modi ,Radhika ,Virudhunagar temple ,Virudhunagar ,Sarathkumar ,Angapradhakshan ,Congress party ,DMK ,Virudhunagar Lok Sabha ,Angapradhaksan ,Prime ,
× RELATED சமூகப் பணியும், மக்கள் நலப் பணியும் தொடரும்: எக்ஸ் தளத்தில் ராதிகா உறுதி