×

கலைஞரின் 101-வது பிறந்தநாளை ஒட்டி பரூக் அப்துல்லா, டி.ராஜா புகழாரம்..!!

சென்னை: கலைஞரின் 101-வது பிறந்தநாளை ஒட்டி பரூக் அப்துல்லா, டி.ராஜா ஆகியோர் புகழாரம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் பாடுபட்டவர் கலைஞர் என்று பரூக் அப்துல்லா புகழாரம் தெரிவித்தார். நெருக்கடியான நேரத்தில் உறுதுணையாக இருந்தவர் கலைஞர் என்றும் அவர் கூறினார். கலைஞரின் தமிழால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்று டி.ராஜா தெரிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவர், சமூக நீதியை உயர்த்திப் பிடித்தவர் கலைஞர். நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை கலைஞரை தவிர்த்து விட்டு எழுத
முடியாது. இந்தியாவின் நெருக்கடியான காலகட்டத்தில் கலைஞருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

The post கலைஞரின் 101-வது பிறந்தநாளை ஒட்டி பரூக் அப்துல்லா, டி.ராஜா புகழாரம்..!! appeared first on Dinakaran.

Tags : Farooq Abdullah ,T.Raja ,Chennai ,T. Raja ,Tamil Nadu ,India ,
× RELATED தோல்வியை தழுவிய பரூக் அப்துல்லா, மெகபூபா