×

(திமலை) அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைேமாதியது 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் கோடை விடுமுறை முடிவடைவதால்

 

திருவண்ணாமலை, ஜூன் 3: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகரித்து இருந்த நிலை மாறி, வார இறுதி நாட்களிலும், தொடர் விடுமுறைகளிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனக்காக வருகின்றனர். குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,கோடை விடுமுறை முடிவடைய உள்ளதாலும் வார இறுதி விடுமுறை தினம் என்பதாலும் நேற்று அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்காக கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக அலைமோதியது.

அதன்படி, அதிகாலை 5 மணியில் இருந்தே பொது தரிசன வரிசை மற்றும் ₹50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் குவிந்திருந்தது. அதனால், சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து வெளி பிரகாரம் வரை நீண்டிருந்தது. எனவே, பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் தரிசனம் முடிந்து திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்ய, மூன்றாம் பிரகாரத்தில் இருந்து சிறப்பு தரிசனம் வரிசை ஏற்பாடு செய்யப்பட்டது. தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் குளிர்ந்த மோர் மற்றும் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தின் கீழ் லட்டு வழங்கப்பட்டது.
பக்தர்கள் வருகை அதிகரித்ததால், மாடவீதிகள் சின்ன கடை தெரு சன்னதி தெரு உள்ளிட்ட இடங்களில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் வருகை தந்த சுற்றுலா வேன், பஸ் ஆகியவை நகருக்குள் அனுமதிக்காமல், காந்திநகர் பைபாஸ் சாலை மற்றும் அண்ணா நுழைவாயில் பகுதியில் பார்க்கிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.கேப்சன் வார விடுமுறை தினமான நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கட்டண வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

 

The post (திமலை) அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைேமாதியது 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் கோடை விடுமுறை முடிவடைவதால் appeared first on Dinakaran.

Tags : Thimalai ,Annamalaiyar temple ,Tiruvannamalai ,Tiruvannamalai Annamalaiyar Temple ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரமோற்சவ...