×

கஞ்சா விற்ற 2 பேர் கைது

 

திருச்சி, ஜூன் 3: திருச்சி காந்தி மார்க்கெட் போலீசாருக்கு கஞ்சா விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காமராஜ் நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக ஒருகட்டன்மலை ரோடு நாயக்கர் தெருவை சேர்ந்த ரவுடி பாபு (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் மில் காலனியை சேர்ந்த ராஜ்கிரண் என்கிற பரத் (27) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 300 கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Gandhi Market Police ,Orukatanmalai Road Nayakar Street ,Kamaraj Nagar ,Dinakaran ,
× RELATED வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!