×

பணகுடியில் கலைஞர் 101வது பிறந்தநாள் விழா

 

வள்ளியூர், ஜூன் 3:நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை எம்பி ஞானதிரவியம் ஆகியோர் அறிவுறுத்தலின் படி, முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்தநாளை முன்னிட்டு வள்ளியூர் ஒன்றிய தலைவரும், வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளருமான ராஜா ஞானதிரவியம் சார்பில் வள்ளியூர் யுவிஎஸ்எஸ் முதியோர் இல்லத்தில் காலை உணவு, குமாரபுரம் பெத்தாணியா இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.தொடர்ந்து வள்ளியூர் பழைய பேருந்து நிலையம், வள்ளியூர் பேருந்து நிலைய பணிமனை, பணகுடி பஸ்நிலையம், செட்டிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்ட கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

The post பணகுடியில் கலைஞர் 101வது பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Tags : Panagudi Valliyur ,Nellai East District ,Aavudayappan ,Nellai MP ,Gnanathiraviyam ,Chief Minister ,Valliyur Union ,President ,Valliyur South Union ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்