×

கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாட தடை

 

திருப்பூர், ஜூன் 3: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில், பெரிய அளவிலான மைதானத்தில் சுற்றுவட்டார பகுதி சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தினமும் கிரிக்கெட் விளையாடி வந்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் மைதானத்தின் உள்ளே அடிக்கடி இருசக்கர வாகனத்தையும் ஓட்டி செல்வதும் தொடர்ந்து வந்தது.

இந்தநிலையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் மைதானத்தில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாட அனுமதி இல்லை. இருசக்கர வாகனங்கள் மைதானத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4.30 முதல் 6.30 மணி வரையும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாட தடை appeared first on Dinakaran.

Tags : Ban ,Tirupur ,Tirupur Chikkanna Government Arts College ,Dinakaran ,
× RELATED உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு