×

விவசாய தோட்டங்களில் மின் வயர்கள் திருட்டு

 

பல்லடம், ஜூன் 3: பல்லடம் அருகே அலகுமலை ஊராட்சி பகுதியில் விவசாய கிணற்று வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஒன்றியம் அலகுமலை ஊராட்சி கோவில் பாளையத்தில் உள்ள செங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் குருசாமி. இவரது விவசாய கிணற்றிலிருந்து 30 மீட்டர் வயர், கவுண்டம்பாளையம் தேவி தோட்டத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர் தோட்டத்தில் 50 மீட்டர் வயர், அதே ஊரைச்சேர்ந்த சேகர் என்பவரது தோட்டத்திலிருந்து 7மீட்டர் வயர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விவசாய தோட்டங்களில் மின் வயர்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Palladam ,Alakmalai panchayat ,Sengatu Estate ,Kovil Palayam ,Alakumalai Panchayat ,Pongalur Union ,Dinakaran ,
× RELATED பல்லடம் கடை வீதி மாகாளியம்மன் கோவில் பாலாலயம் விழா