×

விடுமுறை தினத்தையொட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

மதுரை, ஜூன் 3:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இதேபோல் வெளி நாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வருகை தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று சுபமுகூர்த்தம், பள்ளி, கல்லூரி விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. அம்மன் மற்றும் சுவாமியை நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

மேலும், கோயில் வளாகத்தில் வளைகாப்பு மற்றும் காது குத்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சித்திரை வீதியில் உள்ள கடைகள் மற்றும் நகை, ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தனியார் விடுதிகள் நிரம்பி உள்ளது.பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால் கோயில் வளாகத்தில் இருந்த பிரசாத ஸ்டால்களில் லட்டு, அப்பம், முறுக்கு மற்றும் பொங்கல், புளியோதரை உள்ளிட்ட பிரசாதங்கள் அதிகளவில் விற்பனையானது. கோயிலை சுற்றிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post விடுமுறை தினத்தையொட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Meenakshi Amman temple ,Madurai ,Madurai Meenakshi Amman Temple ,Swami ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு