×

பூட்டிய வீட்டிற்குள் இந்து முன்னணி நிர்வாகி மனைவி மர்மச்சாவு

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (38). இவர், இந்து முன்னணி திண்டுக்கல் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது மனைவி ரேவதி (35). இருவரும் ஒட்டன்சத்திரம் அருகே வெரியப்பூர் பிரிவில் ஓட்டல் நடத்தி வந்தனர். மாரிமுத்து நேற்று வெளியூர் சென்று விட்டார். ரேவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று பிற்பகல் மாரிமுத்து மனைவிக்கு போன் செய்தார். அவர் எடுக்கவில்லை. எனவே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு போன் செய்து, வீட்டில் பார்க்கும்படி கூறியுள்ளார்.

அவர்கள் சென்று கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவு திறக்கவில்லை. இதனையடுத்து மாரிமுத்துவின் தம்பி சந்தானம் உள்ளிட்டோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரேவதி ஆடைகள் இல்லாமல் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் ரேவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ரேவதி குளித்துவிட்டு வரும்போது தடுமாறி கீழே விழுந்து மூக்கில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

The post பூட்டிய வீட்டிற்குள் இந்து முன்னணி நிர்வாகி மனைவி மர்மச்சாவு appeared first on Dinakaran.

Tags : Hindu Front ,Marmachau ,Vedasandur ,Marimuthu ,Bharti Nagar, Vedasandur, Dindigul district ,District Secretary ,Dindigul Hindu Front ,Revathi ,Veriyapur ,Othanchatram ,Dinakaran ,
× RELATED களக்காடு அருகே மாவடியில் இந்து அன்னையர் முன்னணி கூட்டம்