×

சின்னசேலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 10 பேர் படுகாயம்

சின்னசேலம்: சின்னசேலம் அருகே விவசாய தொழிலாளர்கள் சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாககுப்பம் கிழக்கு காட்டுகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் (31). இவருடன் விஜய், குருசாமி உள்ளிட்ட 22 பேர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையை சுற்றி பார்க்க ஒரு வேனில் நேற்று காலை சுமார் 5 மணியளவில் வீட்டில் இருந்து கிளம்பி உள்ளனர்.

வேனை சின்னசேலம் அருகே உள்ள கூகையூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தகுமார் ஓட்டி சென்றார். நாககுப்பம் கிராமத்தை கடந்து பாண்டியங்குப்பம் எல்லையில் உள்ள வீரமுத்து கவுண்டர் என்பவரது நிலத்தின் அருகே வேன் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதையடுத்து வேனில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்றி உள்ளனர்.

மேலும் தகவலறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் வேனில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் தொழிலாளி மணிமாறன் (28) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் திருமணமானவர். இவருக்கு ராஜேஸ்வரி (25) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மேலும் தமிழரசன் (11), ராமசாமி (54), உள்ளிட்ட 10 பேர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சின்னசேலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 10 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Manimaran ,Nagakuppam East Kattukotai ,Kallakurichi district.… ,Dinakaran ,
× RELATED மனைவியை கொன்று புதைத்து கணவன் தூக்கிட்டு தற்கொலை