×

ஈரோட்டில் 20 நிமிடத்தில் கலைஞரின் உருவப்படத்தை நாவால் வரைந்த ஓவியர்

ஈரோடு: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் இன்று (3ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஓவியரும், கலை ஆசிரியருமான ஈரோடு இந்திரா நகர் மோசிக்கீரனார் 2வது வீதியை சேர்ந்த சவுகத் அலி மகன் ஷானவாஸ் (29) தூரிகை இன்றி அவரது நாவினை கொண்டு வெள்ளை சார்ட்டில் கருப்பு மையை பயன்படுத்தி 3 அடி நீளம், 2 அடி அகலத்தில் 20 நிமிடத்தில் கலைஞரின் படத்தை வரைந்து அசத்தியுள்ளார். இந்த ஓவியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஷானவாஸ் ஏற்கனவே, சலவை சோப்புகளை கொண்டு கலைஞரின் மணிமண்டபமும், கலைஞரின் பேனாவுடன் கூடிய மணிமண்டபமும் அமைத்துள்ளார். கடந்த ஆண்டு ‘தமிழ் வாழ்க’ என்ற வாசகங்கள் அடங்கிய ரப்பர் ஸ்டாம்பினை பயன்படுத்தி மஞ்சப்பையில் கலைஞரின் உருவப்படத்தை வரைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவரின் ஓவிய திறமையை பாராட்டி ‘கலை வளர்மணி’ விருது வழங்கி கவுரப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஈரோட்டில் 20 நிமிடத்தில் கலைஞரின் உருவப்படத்தை நாவால் வரைந்த ஓவியர் appeared first on Dinakaran.

Tags : Erode ,Tamil Nadu ,Chief Minister ,Kalayan Karunanidhi ,Shahnawas ,Shaukat Ali ,2nd Street ,Indira Nagar ,
× RELATED தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு