×

அசாமில் கனமழையால் வெள்ளம் 6 லட்சம் பேர் கடும் பாதிப்பு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

கவுகாத்தி: அசாமில் ரெமல் புயலுக்கு பின் ஏற்பட்ட கனமழையால் 10 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மாநிலத்தில் பெய்த கனமழையால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கன மழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால், ஹைலகண்டி,ஹோஜாய், மோரிகான்,கரீம்கஞ்ச்,நாகோன், கச்சார்,திப்ருகர், கோலாகாட், கர்பி அங்க்லாங் மாவட்டங்களில் உள்ள 6 லட்சம் பேர் பாதிபுக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

நாகோன் மாவட்டம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அந்த மாவட்டத்தில்,2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து ஹோஜாய் 1,26,813 பேரும், கச்சாரில் 1.12,265 பேரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அந்த மாவட்டங்களை சேர்ந்த 40,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்புக்குள்ளான இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு, மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் ரயில், சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சந்திரநாத்பூர் பிரிவு ரயில் பாதை மற்றும் சிர்ச்சார் ரயில் நிலையத்தில் வெள்ளம் புகுந்ததால் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

The post அசாமில் கனமழையால் வெள்ளம் 6 லட்சம் பேர் கடும் பாதிப்பு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Assam ,Guwahati ,Cyclone Remal ,Hailakandi ,Hojai ,Morigaon ,Karimganj ,Nagaon ,Cachar ,Dibrugarh ,Kolagat ,Dinakaran ,
× RELATED அசாமில் மழையால் 3.5லட்சம் பேர் பாதிப்பு