சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடக்கும் ஷாங்ரி லா பாதுகாப்பு மாநாடு சிங்கப்பூரில் நடந்து வந்தது. ஆசியாவின் முதன்மை பாதுகாப்புக்கான கலந்துரையாடலான மாநாட்டின் கடைசி நாளான நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசுகையில்,‘‘ சுவிட்சர்லாந்தில் இந்த மாதம் 15,16 ஆகிய தேதிகளில் சுவிட்சர்லாந்தில் அமைதி மாநாடு நடக்கிறது . உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் உலக நாடுகளுக்கு இடையே பொதுவான புரிதல் இருப்பதைக் காட்டுவது மாநாட்டின் நோக்கம்.
போரில் ரஷ்யாவால் கடத்தப்பட்ட உக்ரைன் வீரர்களை விடுவிக்க வேண்டும். போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மாநாட்டில் கொண்டுவரப்படும் திட்டங்கள் பற்றி விவாதிக்க உக்ரைன் தயாராக உள்ளது. அதிக அளவிலான நாடுகள் பங்கேற்கும்போது அதை ரஷ்யா கேட்க வாய்ப்பு உள்ளது. இதற்காக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்-ஐ சந்தித்து பேசுவேன்.சீனா மூலம் அமைதி மாநாட்டை சீர்குலைப்பதற்கு ரஷ்யா முயற்சித்து வருகிறது. அதனடிப்படையில், அமைதி உச்சிமாநாட்டில் பங்கேற்க கூடாது என பல நாடுகளுக்கு தூதர்கள் மூலம் சீனா மிரட்டல் விடுக்கிறது’’ என்றார்.
The post அமைதி மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளுக்கு சீனா மிரட்டல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.