நகர்: எல்லை கட்டுப்பாட்டு கோடில் இருந்து சுமார் 70 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை ஜம்மு காஷ்மீர் டிஜிபி ரஷ்மி ரஞ்சன் ஸ்வெயின் வெளியிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் டிஜிபி ரஷ்மி ரஞ்சன் ஸ்வெயின் நேற்று பேட்டியளித்தார். அப்போது, எல்லை பகுதிகளில் உள்ள தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து அவர் கூறும்போது,‘‘ எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் உள்ள இடங்களில் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதற்கான தளங்கள் பாகிஸ்தானில் செயல்படுகின்றன. அவற்றில் இருந்து 60 முதல் 70 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கு காத்திருக்கின்றனர். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பினருடனான சந்திப்புகளின் மூலம் ஆட்கள் மற்றும் பொருட்களை இந்தியாவுக்குள் அனுப்புவதை பாகிஸ்தான் இன்னும் நிறுத்தவில்லை என தெரியவந்துள்ளது.
ஊடுருவுவலை தடுப்பதில் பாதுகாப்பு படையினர் ஓரளவு வெற்றி கண்டுள்ளனர். ஆனால் அச்சுறுத்தல் நீடிக்கிறது. நமது பகுதியில் சீர்குலைவை ஏற்படுத்தும் எதிரியின் வலிமையை குறைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. இதில்,பல வெளிநாட்டு தீவிரவாதிகளும் இருக்கின்றனர். எந்த நேரத்திலும், ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட குழுக்களாக 60-70 பேர் நாட்டுக்குள் ஊடுருவுவதற்குக் காத்திருக்கின்றனர்.ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறையும் இணைந்து எதிரியின் சதி திட்டத்தை முறியடிப்போம். ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள், பணம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் கடும் சவால்கள் உள்ளன. தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டால் ஆளில்லா விமானங்கள் இந்தியாவிற்குள் வருவதை தடுக்க முடியும்’’ என்றார்.
The post பாக். எல்லையில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கும் 70 தீவிரவாதிகள்: போலீஸ் டிஜிபி அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.